New Page 1
மெய் வழக்கு என்பது உண்மை வரலாற்றையும்,
புற வழக்கு என்பது கற்பனையையும் குறித்தல் கூடும். கட்டுக் கதைகளைச் சொல்லும்போது,
“பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி” என்று குறித்தார் தொல்காப்பியர். அது உரை நடையில்
வருவது. அது போன்ற கற்பனையைப் பண்ணத்தியென்று அக்காலத்தில் சொல்லியிருத்தல் கூடும்.
அடுத்தபடி, ‘இஃது எழுதும்
பயிற்சியில்லாத புறவுறுப்புப் பொருள்களைப் பண்ணத்தி என்ப’ என்று கூறுகிறார் உரைகாரர்.
வாய் மொழியாக வருவது, எழுதப் பெறாதது என்பதைக் குறிக்கவே இவ்வாறு எழுதினர் போலும்.
பிறகு பண்ணத்திக்கு உதாரணம்
கூறும்போது, நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை, வஞ்சிப் பாட்டு, மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவற்றைச்
சொல்கிறார். கூத்தில் இடையிடையே பாடும் பாட்டையே நாடகச் செய்யுளாகிய பாட்டுமடை என்று
குறிக்கிறார். வஞ்சிப் பாட்டு என்பது ஓடப் பாட்டு; இன்றும் மலையாளத்தில் ஓடப் பாட்டை
வஞ்சிப் பாட்டு என்று வழங்குகிறார்கள். மோதிரப் பாட்டு, கடகண்டு என்பவை அக்காலத்தில்
வாய் மொழியாக வழங்கியவை போலும்.
கவிஞர்களின் பாட்டிலே வரும்
பொருள் இந்தப் பண்ணத்தியிலும் வரும்; ஆனால் அதில் வருவது போலத் தெளிவும் தொடர்பும் இரா.
அதனால், “பாட்டிடைக் கலந்த பொருளவாகி” என்று இலக்கணம் கூறினார். இதுவும் ஓசையாலும் தாளத்தாலும்
பாட்டென்றே சொல்லத்தக்கது; ஆனால் பாட்டைப்போல வரையறை செய்ய முடியாதது. அதனால், “பாட்டின்
இயல” என்றார். இந்த இரண்டு இலக்கணங்களும் நாடோடிப் பாடல்களுக்கு உரியன. ஆதலின், பண்ணத்தி
என்ற பெயரால் தொல்காப்பியர் குறிக்கும் இலக்கிய வகை நாடோடிப் பாடல்களே என்று கொள்வது
பொருத்தமென்று தோன்றுகிறது. பண்ணத்தி ( பண் நத்தி ) என்ற சொல்லுக்கு, ‘பண்ணை விரும்புவது’
என்று பொருள். இசைப்பாட்டில் வரையறையான பண் அமைந்திருக்கும்; இப் பாட்டிலும் இன்னோசை
இருப்பினும் இசைப் பாட்டுக்குரிய வரையறையில்லை. ஆதலின் பண்ணமைந்த பாடல் என்னாமல் பண்ணத்தி
என்றார்.
இசைப் பாட்டைப்
போன்றது; ஆனால் அதுவேயன்று; இரண்டிலும் இன்னிசை உண்டு. கவியைப் போன்ற பொருளை உடையது; ஆனால்
அது அன்று; அந்தப் பொருள் தொடர் பின்றி இடையிடையே விட்டு விட்டு வரும். பாட்டைப் போன்ற
ஓசை
|