ப
பால் பழம்
|
பிழைப்பு தழைப்பு |
மந்திரம் தந்திரம் |
மாங்காய் தேங்காய் |
மாமன் மச்சான்
|
மானம் மரியாதை
|
முந்தி பிந்தி
|
முன் பின் |
மூஞ்சி முகம் |
மூட்டை முடிச்சு |
மூலை முக்கு |
மேள தாளம் |
லொட்டு லொசுக்கு |
வம்பு தும்பு |
வற்றல் தொற்றல் |
வாது வம்பு |
வீடு வாசல் |
வெட்கம் சிக்கு |
வெட்டி விடாய் |
வெள்ளி செவ்வாய் |
வெற்றிலை பாக்கு |
வேலை வெட்டி |
ஜப தபம் |
18. ஒருவகை வழக்கு
எந்த வார்த்தை
சொன்னாலும் அதோடு கிகரத்தில் தொடங்கும் பொருளற்ற சொல் ஒன்றையும் சேர்த்துச் சொல்லும்
ஒருவகை வழக்கு இந்நாட்டில் வழங்குகிறது. அது நாடோடிப் பாடல்களிலும் ஏறியிருக்கிறது.
கடன் கிடன் |
கண்டி கிண்டி
|
கண்ணு கிண்ணு
|
கள்ளன் கிள்ளன் |
சண்டை கிண்டை |
பன்றி கின்றி |
பிச்சுவாளும் கிச்சுவாளும் |
வேலுக் கம்பும் கீலுக் கம்பும் |
19. குறிப்புத் தொடர்
ஒலியையும் நிறத்தையும்
வேகத்தையும் பிறவற்றையும் குறிக்கும் சில தொடர்கள் பலகாலமாக வழங்கி வருகின்றன. கம கம என்று
சொன்னாலே மணத்தைப் பற்றிய பேச்சு வருகிறது என்று தெரிந்துவிடும்.
கடகட1
|
கப்சுப் |
கருகரு |
கலகல |
கிடுகிடு |
குசுகுசு |
குடுகுடு |
குமுகுமு |
சட சட |
சர சர |
சலசல |
தடதட |
தாம் தாம் |
தீம் தீம் |
பக்கென்று |
படபட |
பரபர |
பலே பலே |
பளபள |
புடுபுடு |
மடமட |
மினுமினு |
முணுமுணு |
மொரமொர |
வேகுவேகு |
________________________________
1. இவற்றிலிருந்து
வினைச் சொற்கள்
பிறப்பதுண்டு;
உ-ம். கடகடத்தல.
|