20
20. முன்னிலைகள்
நீதி நூல்களில்
புலவர்கள் தாம் கூறும் நீதிகளை யாரேனும் பெண்ணையோ ஆடவனையோ முன்னிலைப்படுத்திச்
சொல்லுதல் ஒரு வழக்கம். அவற்றை முறையே மகடூஉ முன்னிலை, ஆடூஉ முன்னிலை என்பார்கள். நாடோடிப்
பாடல்களில் அப்படி இருபாலார்களையும் முன்னிலைப்படுத்திப் பேசும் வழக்கம் பெருக வழங்குகிறது.
இத் தொகுதியில் வரும் முன்னிலைகளையெல்லாம் கீழே அகராதி வரிசையிற் காணலாம்.
அடி |
அடி பொன்னம்மா |
அடே |
அடே பொன்னையா |
அப்பா |
அப்பாடா |
அம்மணி |
அம்மா |
அன்னமே பொன்னம்மா
|
அன்னே நன்னே நானே நன்னே மீனாம்போ |
ஆசைக்கண்ணாட்டி |
எங்குலக மச்சானே |
என் அத்தானே |
என் திலக மச்சானே
|
என்னைப் பெற்ற அம்மா |
ஏலங்கிடி லேலோ |
ஏலேலக் குயிலே லல்லோ |
ஏலேலோ |
ஐயா |
ஐலசா |
ஓ சாமியே |
கட்டித் தங்கமே
|
கண்ணாட்டி |
கண்ணுப் பொன்மணி |
கண்ணுப் பொன்னம்மா |
கண்ணே |
கண்மணி |
கண்மணியே |
கன்னி |
குட்டி |
குயிலே |
சாமி |
சின்னப் பாலகா |
சுண்டெலிப் பெண்ணே |
தங்கம் தையலாளே |
தங்க மாமா |
தங்க மாமாவே |
தங்க ரத்தினமே |
தந்தானக் குயிலே |
தாயே |
நல்ல பொன்னையா |
நானே நன்னே |
நேசக் கண்ணாட்டி |
பெண்ணே |
பையா |
பொன் அத்தானே |
பொன்னுக் கண்மணி |
பொன்னுக் குயிலாளே |
பொன்னு மச்சானே |
பொன்னு மாமா |
பொன்னு மாமாவே |
பொன்னு ரத்தினமே |
பொன்னே |
மச்சான் |
மயிலே |
மாமா |
மீனாம்போ |
ராசாத்தி |
21.
வசவுகள்
வாழ்த்து வகைகளை இலக்கியங்களில்
மிகுதியாகக் காணலாம். வையும் இடங்களில் அந்த வசவு குறிப்பாக
|