ஏவ

வழக்கு மொழிச் சிதைவு - இலக்கணம்

97

ஏவாள்

கல்லறை

கன்னிமரி

கானா ஊரு

குருஸ் (Cross) 

கொல்கதா

சம்மனசு

சிலுவை

சூசை முனி

சேசு

தாவீது

தேவமாதா

நாசரேத்

பாதிரி

பெத்தலேகம்

மாரியம்மாள்

மேய்ப்பர்

லாசரு

வான ராஜ்யம்

24. வழக்கில் சிதைவு - இலக்கணம்

    உலக வழக்கில் சிதைந்து வழங்கும் சொற்கள் பல. அவற்றில் சில இலக்கியங்களிலும் வழங்குகின்றன. அவற்றை மரூஉ மொழிகள் என்பார்கள். சொற்களில் நிகழும் சிதைவை ஆராய்வது மிகவும் சுவையான ஆராய்ச்சி. மொழி நூலறிஞர்களுக்கு இந்தச் சிதைவு நெறி பல உண்மைகளை விளக்குகிறது. சொல்லின் உருவம் எப்படியெல்லாம் மாறிவரும் என்பதை இந்தச் சிதைவுகளை வகைப்படுத்திப்பார்த்து உணர்ந்துகொள்ளலாம். கொச்சைத் தமிழ், கொச்சை மொழி என்று நாம் இவற்றை வழங்குகிறோம்.

    பகுபதம் பகாப்பதமாகிய ஒருமொழிகள் சிதைவதும், இருமொழித்தொடர் சிதைந்து ஒருமொழிபோல வழங்குவதும், பன்மொழித்தொடர் சிதைந்து ஒரு மொழிபோல வழங்குவதும் பேச்சு வழக்கில் இயல்பாக உள்ளன.

    முதல், இடை, கடை என்ற மூன்று இடங்களிலும் தோன்றல் திரிதல் கெடுதல் என்னும் மூன்று வகையான விகாரங்களும் பெற்றுச் சொற்களும் சொற்றொடர்களும் சிதைகின்றன.

    ஒரே சொல்லுக்கும், சொற்றொடர்க்கும் வெவ்வேறு விதமாகச் சிதைந்த உருவங்கள் வேறு வேறு இடங்களில் வழங்கும். இந்த வேறுபாடு இடம், வகுப்பு முதலியவற்றிற்கு ஏற்ப அமையும். நின்று என்ற ஒரு சொல்லே வழக்கில் நின்னு என்றும், நிண்ணு என்றும், நிண்டு என்றும், நிந்து என்றும் பலவகையாகச் சிதைந்து வழங்குவதைக் காண்க. அவர்கள் என்ற சொல்லே அவங்க,