|
ஒத
ஒத்தைவண்டி வருதடி - ஏலங்கிடி
லேலோ
ஓடிஓடி வருதடி - ஏலங்கிடி
லேலோ
15
ஜட்காவண்டி வருதடி - ஏலங்கிடி
லேலோ
ரிச்சாவண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
16
மோட்டார்வண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
லாரிவண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
17
சைகிள்வண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
சாமான்வண்டி வருதடி
- ஏலங்கிடி லேலோ
18
தாண்டித்தாண்டி வருதடி -
ஏலங்கிடி லேலோ
சத்தம்அங்கே கேட்குதடி
- ஏலங்கிடி லேலோ
19
தாசிவேசி பாடுறாங்க -
ஏலங்கிடி லேலோ
ஓசைரொம்பக் கேட்குதடி
- ஏலங்கிடி லேலோ
20
சிவப்புத்தூளு பறக்குதடி -
ஏலங்கிடி லேலோ
சீக்கிரம்சீக்கிரம்
வருதடி - ஏலங்கிடி லேலோ
21
கருப்புத்தூளு பறக்குதடி -
ஏலங்கிடி லேலோ
காடெல்லாம் கறுப்பா இருக்கு
- ஏலங்கிடி
லேலோ
22
சிட்டான்சிட் டாண்ணுதானே
- ஏலங்கிடி லேலோ
சேர்ந்துசேர்ந்து
வருதடி - ஏலங்கிடி லேலோ
23
காத்தாப் பறந்துகிட்டு -
ஏலங்கிடி லேலோ
கிட்டக்கிட்ட வருதடி
- ஏலங்கிடி லேலோ
24
குதிரையெல்லாம் கூடிக்கிட்டு
- ஏலங்கிடி லேலோ
கும்மாளந்தான் போடுதடி
-
ஏலங்கிடி லேலோ
25
கோணிக்கோணி நடக்குதடி
- ஏலங்கிடி லேலோ
கொஞ்சிக்கொஞ்சி நடக்குதடி -
ஏலங்கிடி லேலோ
26
|