பக்கம் எண் :

New Page 1

128

மலையருவி

குட்டிக்குதிரை நிமிந்துக்கிட்டு - ஏலங்கிடி லேலோ
        குதிச்சுக்குதிச்சு ஓடுதடி - ஏலங்கிடி லேலோ    
    

27

பொண்ணுவருது பொண்ணுவருது -
                        ஏலங்கிடி லேலோ
        பொன்னுபோட்ட வண்டியிலே -
                        ஏலங்கிடி லேலோ
       

28

பொண்ணைப்பெத்த தாயிவருது - ஏலங்கிடி லேலோ
        பட்டுப்போட்ட வண்டியிலே -
                        ஏலங்கிடி லேலோ

29

வண்டியிலே வந்ததுரை - ஏலங்கிடி லேலோ
        எங்கள்எல்லா ருக்கும்முறை -
                        ஏலங்கிடி லேலோ
        

30

எந்திரிச்சுப் பார்த்துப்பார்த்து - ஏலங்கிடி லேலோ
        முந்திமுந்திப் போறானடி - ஏலங்கிடி லேலோ   
     

31

ஆளுகளைப் பார்த்துப்பார்த்து - ஏலங்கிடி லேலோ
        அமலெல்லாஞ் செய்யறாண்டி -
                        ஏலங்கிடி லேலோ
    

32

தீனி தயாருசெய்ய - ஏலங்கிடி லேலோ
        திடுதிடுண்ணு ஓடுராண்டி - ஏலங்கிடி லேலோ
        

33

தானேஎல்லாம் செய்யுறாண்டி - ஏலங்கிடி லேலோ
        தயவெல்லாம் காட்டுறாண்டி -
                        ஏலங்கிடி லேலோ
        

34

தேமேசை போடச்சொல்லி - ஏலங்கிடி லேலோ
        திட்டித்திட்டிச் சாடுறாண்டி -
                        ஏலங்கிடி லேலோ
         

35

தண்ணிகொண்டாரச்சொல்லி - ஏலங்கிடி லேலோ
        தலைதெறிக்க ஓடுறாண்டி - ஏலங்கிடி லேலோ    
    

36

வெந்நீர் தயார்செய்ய - ஏலங்கிடி லேலோ
        வேகுவேகுண்ணு ஓடுறாண்டி -
                        ஏலங்கிடி லேலோ
    

37