|
எல
எல்லாத்தையும் செஞ்சுக்கிட்டு
- ஏலங்கிடி லேலோ
எட்டிஎட்டிப்
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
38
மச்சான்வரக் காணாமிண்ணு
- ஏலங்கிடி லேலோ
மயங்கிமயங்கி நிற்கிறாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
39
தேங்கித்தேங்கி நிற்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ
ஏங்கிஏங்கி நிற்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ.
40
முக்கிமுக்கிப்
பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
முழிச்சு முழிச்சுப்
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
41
குனிஞ்சுகுனிஞ்சு
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
நிமிர்ந்துநிமிர்ந்து
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
42
குந்திக்குந்திப்
பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
வீங்கிவீங்கிப்
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
43
சந்துசந்தாப்
பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
சாஞ்சுசாஞ்சு
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
44
தெருத்தெருவாய்
பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
திண்ணைமேலே
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
45
பரபரண்ணு பார்க்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ
பயந்துபயந்து
பார்க்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
46
|