பக்கம் எண் :

New Page 1

130

மலையருவி

ரோட்டுமேலே பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        மோட்டுமேலே பார்க்கிறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.
      

47

காட்டுவழி பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        வீட்டுவழி பார்க்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ.    
   

48

பார்த்துக்கிட்டே இருக்கும்போது -
                                ஏலங்கிடி லேலோ
        மாமன்மகன் வந்துட்டாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.

49

பல்லைப்பல்லை இளிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        கலர்சோடா உடைக்கிறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.
       

50

அல்லோஅல்லோ என்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        கையைப்பிடிச்சுக் குலுக்குறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.
       

51

சாப்புத்தண்ணி குடிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        சாராயத்தண்ணி குடிக்கிறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.

52

பீருத்தண்ணி குடிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        பிராந்தித்தண்ணி குடிக்கிறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.
      

53

 பீப்பாய்த்தண்ணி குடிக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        போதைத்தண்ணி குடிக்கிறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.

54

பொட்டணத்தைத் திறக்கிறாண்டி - ஏலங்கிடி லேலோ
        புகையிலைப்பொடி குடிக்கிறாண்டி -
                                ஏலங்கிடி லேலோ.
       

55