|
New Page 1
சோறுபோட்டு வைக்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ
சுருட்டெடுத்துக்
குடிக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
56
வாழைப்பழத்தைக்
கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
மாதுளம்பழத்தைக்
கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
57
சீதாப்பழம் கொடுக்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ
சீமைஆப்பிள் வைக்கிறாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
58
பலாப்பழத்தைக்
கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
கொய்யாப்பழத்தைக்
கொடுக்கிறாண்டி
ஏலங்கிடி லேலோ.
59
ஆரஞ்சுப்பழத்தைக்
கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ
அன்னாசிப்பழமும் சேர்க்கிறாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
60.
மாம்பழத்தை அறுக்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ
சாம்பிராணி போடுறாண்டி
-
ஏலங்கிடி லேலோ.
61
சேட்டுக்கடை மிட்டாயடி -
ஏலங்கிடி லேலோ
சேமியாவும்
கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
62
பூந்திலட்டு நெய்ஜிலேபி
- ஏலங்கிடி லேலோ
பூராவுங் கொடுக்கிறாண்டி
- ஏலங்கிடி லேலோ.
63
தாராக்கறி பாயாசம் -
ஏலங்கிடி லேலோ
தப்பாமலே
கொடுக்கிறாண்டி -
ஏலங்கிடி லேலோ.
64
|