ஆத
ஆத்திலே ஊத்துப்பாரு
அவன்போற நேர்த்திபாரு
முக்காத்துட்டுக் கொப்பைப்பாரு
முக்காட்டையும் சேர்த்துப்பாரு.
112
தண்டட்டி போட்டபிள்ளை
தானே வளர்ந்தபிள்ளை
கட்டிக் கொடுக்கலேண்ணு
முட்டிமுட்டி அழுகிறாளே.
113
எட்டையா புரத்திலேயும்
எட்டுநாள் பாவைக்கூத்து
பாவைக்கூத்துப் பார்க்கப்போய்ப்
பசுங்கிளியைத் தப்பவிட்டேன்.
114
எட்டையா புரத்திலேயும்
நட்டுவச்ச தென்னந்தோப்பு
மகராசன் தென்னந்தோப்பில்
மயில்வந்து மேய்ந்தடையும்.
115
சிவகிரி ராசாநம்ம
செல்லத் துரைபாண்டியா
எங்கும்புகழ் பெற்ற எங்கள்
இரக்கமுள் ளதுரையே.
116
கச்சேரி வாசலிலே
லட்சம்பேரு நிற்கையிலே
கறுத்தசாமி இல்லாமே
களையும் பொருந்தவில்லை.
117
கச்சேரி கண்டபிள்ளை
கையெழுத்துப் போட்டபிள்ளை
போலீசு கண்டபிள்ளை
போதுமடி உன்உறவு.
118
|