பக்கம் எண் :

பம

குடும்பம்

199

பம்புக்குழா யின்னுசொன்னால்
        வம்பொண்ணும் வாணாமுன்னுவார்
    சம்பந்த முன்னுசொன்னால்
        சாணிப்பந்தம் கட்டிடுவார்.

10

கச்சேரி என்றுசொன்னால்
        பறைச்சேரி என்றுசொல்வார்
    மோட்டார்கார் என்றுசொன்னால்
        ஓட்டம் பிடித்திடுவார்.

11

உடுப்புப்போட்ட வங்களைக்கண்டால்
        அடுப்பைவிட்டுப் போகமாட்டார்
    பஞ்சுமெத்தை என்றுசொன்னால்
        இஞ்சிதின்ற குரங்காவார்.

12

மஞ்சத்திலே படுக்கணுண்ணா
        பஞ்சம்ஏறுதுண்ணுவார்
    பாவிஎங்கே போறேஇண்ணா
        சாவிஎடுக்க ஓடுவார்.
      

13

மல்லுவேட்டி கட்டுங்கண்ணா
        மல்லுக்கட்ட மாட்டேண்ணுவார்
    சில்லுத்தேங்கா வேணுமுண்ணா
        புல்லுக்கட்டைக் கொண்டுவருவார்.
    

14

சாப்பாடு வேணுமாண்ணா
        கூப்பாடு போட்டழுவார்
    பத்துவரை எண்ணச்சொன்னால்
        சுற்றுமுற்றும் பார்த்தழுவார்.
    

15

காப்பிகுடிங்க அத்தானுண்ணா
        கஞ்சித்தண்ணி போதுமென்பார்
    பாயாசம் வேணுமாண்ணா

        பாசாணம் வேணாமுண்ணுவார்.
                                

16