ஆக
ஆகாசக் கப்பலுண்ணா
ஆவேசம்
போல்முழிப்பார்
சக்கர வர்த்தியிண்ணாச்
சக்கரத்தை உருட்டிப்பார்ப்பார்.
17
ஆப்பம்கொஞ்சம் வேணுமாண்ணா
அப்பன்ஊரில் இல்லேண்ணுவார்
கோப்பையிலே பால்இருந்தால்
மோப்பம்நல்லாப் பிடிச்சிடுவார்.
18
பம்பாய்ப்பட்டு வேணுமாண்ணா
பம்பரத்தை ஆட்டிப்பார்ப்பார்
குண்டக்கல்லுக்குப் போகணுண்ணா
குண்டை உருட்டிப்பார்ப்பார்.
19
பேனாஎங்கே இருக்குதுண்ணா
பேனைக்குத்தி உடனேபார்ப்பார்
புத்தகத்தைப் படிக்கச்சொன்னால்
பொடிஎடுத்து உறிஞ்சிடுவார்.
20
பணியாரத்தைத் தின்னச்சொன்னால்
பொத்தலெல்லாம் எண்ணிடுவார்
. . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . .
. . . .
21
ஈரவேட்டி யைஎடுத்து
இடுப்பிலே இறுக்கிக்கட்டி
ஏரியைச் சுற்றிவந்து
எருமைமாட்டை மேச்சிடுவார்.
22
தாமரைக் குளத்துக்குள்ளே
தடாலென்று இறங்கிப்போயி
தான்மேய்க்கிற எருமைக்கடாவைத்
தாற்றுக்கம்பிலே குத்திடுவார்.
23
குச்சுவீட்டில் இருந்தவரை
மச்சுவீட்டிலே வச்சதுக்கு
மச்சினிச்சி எல்லாரையும்
மதிப்பில்லாமே பேசிடுவார்.
24
|