அட
அட்டைமாதிரி இருக்கிறவரைக்
கட்டிலிலே போட்டதுக்குக்
கட்டிலைவிட் டிறங்கிப்போய்க்
கொட்டத்திலே படுத்திடுவார்.
25
அத்தான் மறந்திடுங்க
ஆடுமேய்க்கிற வேலையெல்லாம்
புத்தியாஎங்கள் அக்காளைப்
பூசைநெஞ்சு பிழைச்சிடுங்க.
26
_________
பெண்ணுக்கு அறிவுரை
ஆக்கவேணாம் அரிக்கவேணாம்
-
சுண்டெலிப்பெண்ணே
அறிவிருந்தால் போதுமடி -
சுண்டெலிப்பெண்ணே.
1
காத்திருந்தவன் பெண்டாட்டியைச்
-
சுண்டெலிப்பெண்ணே
நேத்துவந்தவன் கொண்டுபோனான்
-
சுண்டெலிப்பெண்ணே.
2
அதனாலேதான் பயமாஇருக்கு
-
சுண்டெலிப்பெண்ணே
அக்கம்பக்கம் போகாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
3
கண்ணடிக்கிற பயலைக்கண்டால்
-
சுண்டெலிப்பெண்ணே
கண்ணெடுத்துப் பாராதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
4
கடைக்குப்போற பயலைக்கண்டால்
-
சுண்டெலிப்பெண்ணே
கையலைப் பழைக்காதடி -
சுண்டெலிப்பெண்ணே.
5
|