பக்கம் எண் :

202

மலையருவி

காவாலிப் பயலைக்கண்டால் -
சுண்டெலிப்பெண்ணே
    காலாட்டிக்கிட்டு நிற்காதடி -
சுண்டெலிப்பெண்ணே.     

6

நெற்றியிலே பொட்டுவைச்சு -
சுண்டெலிப்பெண்ணே
    நெருங்கிநிண்ணு பேசாதடி -
சுண்டெலிப்பெண்ணே.     

7

புருவத்திலே மையைவச்சு - சுண்டெலிப்பெண்ணே
    பொய்ஒண்ணுமே சொல்லாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
     

8

ஜோட்டியிலே மாட்டல்வச்சு -
சுண்டெலிப்பெண்ணே
    ஜோக்குநடை நடக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

9

வெற்றிலைபாக்குப் போட்டுகிட்டுச் -
சுண்டெலிபெண்ணே
    வெறும்பயலைப் பார்க்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே
.     

10

புகையிலையைப் போட்டுக்கிட்டுச் -
சுண்டெலிப்பெண்ணே
    பொடிப்பயலைப் பார்க்காதடி -
சுண்டெலிப்பெண்ணே      

11

வாறவனையும் போறவனையும் -
சுண்டெலிப்பெண்ணே
    வழிமறிச்சுப் பேசாதேடி - சுண்டெலிப்பெண்ணே.         

12

சந்தைக்குப்போற சனங்களைநீ -
சுண்டெலிப்பெண்ணே
    ஜாடைப்பேச்சுப் பேசாதடி -
சுண்டெலிப்பெண்ணே.    

13