பக்கம் எண் :

பல

204

மலையருவி

பல்வரிசைக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே
    பழிஇழுத்துப் போடாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

24

குறுங்கழுத்துக் காரியேடி - சுண்டெலிப்பெண்ணே
    கோள்குண்டுணி சொல்லாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

25

ரதிமாருக் காரியடி - சுண்டெலிப்பெண்ணே
    ராங்கியோடு நிற்காதேடி - சுண்டெலிப்பெண்ணே.         

26

வழியில்போற வாலிபனைச் -
சுண்டெலிப்பெண்ணே
    வம்பாக்கூப்பிட்டுப் பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
     

27

சொல்லழகில் நீதாண்டி - சுண்டெலிப்பெண்ணே
    தோற்கவைப்பை எல்லாப்பெண்ணையும் -
சுண்டெலிப்பெண்ணே.     

28

அதனாலேநீ அளவுக்குமிஞ்சி -
சுண்டெலிப்பெண்ணே
    ஆங்காரம் படைக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

29

உன்நடையும் கைவீச்சும் - சுண்டெலிப்பெண்ணே
    உசத்தியிண்ணு நினைக்காதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

30

விருந்தும்மருந்தும் மூணுநாள் -
சுண்டெலிப்பெண்ணே
    வீண்பீற்றலெல்லாம் பீற்றாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.     

31

கழுத்தில்தாலி இருக்கும்போது -
சுண்டெலிப்பெண்ணே
    கண்டவனைப் பார்க்காதேடி -

                            சுண்டெலிப்பெண்ணே.

32