New Page 1
கொண்டவன் உசிராயிருக்கையில்
-
சுண்டெலிப்பெண்ணே
கண்டவன்கூடப் பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே.
33
கொண்டவன்நல்லாப்
பார்க்கையிலே -
சுண்டெலிப்பெண்ணே
ரெண்டகம்நீ செய்யாதேடி
-
சுண்டெலிப்பெண்ணே.
34
கல்லுண்ணாலும் கணவனடி -
சுண்டெலிப்பெண்ணே
புல்லுண்ணாலும் புருசனடி -
சுண்டெலிப்பெண்ணே.
35
நாயம் பண்ணினாலும் இல்லையிண்ணாலும்
-
சுண்டெலிப்பெண்ணே
நான்சொல்றதைக் கேட்டுக்கோடி
-
சுண்டெலிப்பெண்ணே.
36
காலையிலே எளுந்திரிச்சுச்
- சுண்டெலிப்பெண்ணே
வாசலுக்குச் சாணிபோடு -
சுண்டெலிப்பெண்ணே.
37
சட்டிபானை லொட்டுலொசுக்கு
-
சுண்டெலிப்பெண்ணே
சகலத்தையும் கழுவிவை
- சுண்டெலிப்பெண்ணே.
38
செம்புபித்தளைப் பாத்திரங்களைச்
-
சுண்டெலிப்பெண்ணே
செம்மையா விளக்கிவை -
சுண்டெலிப்பெண்ணே.
39
வெள்ளிசெவ்வாய்க் கிழமையிலே
-
சுண்டெலிப்பெண்ணே
வீடுபூரா மெழுகணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.
40
ஆடிஅமா வாசையிலே - சுண்டெலிப்பெண்ணே
ஆண்டவனைக் கும்பிடணும் -
சுண்டெலிப்பெண்ணே.
41
|