க
காடுகரை வீடுவாசல் -
சுண்டெலிப்பெண்ணே
கவலையாநீ கவனிக்கணும் -
சுண்டெலிப்பெண்ணே.
42
கிழிஞ்சுபோன கந்தலைக்கூடச்
-
சுண்டெலிப்பெண்ணே
எறிஞ்சிடாமே தைக்கணுண்டி
-
சுண்டெலிப்பெண்ணே.
43
செல்லாத காசைக்கூடச் -
சுண்டெலிப்பெண்ணே
செல்வமா நினைச்சுவை -
சுண்டெலிப்பெண்ணே.
44
லெச்சுமிவீடு தங்கணுண்ணா
- சுண்டெலிப்பெண்ணே
எச்சியைவீட்டில் துப்பாதடி
-
சுண்டெலிப்பெண்ணே.
45
கார்த்திகை தீபாவளியிலே
- சுண்டெலிப்பெண்ணே
கடவுளைநீ கும்பிடணும் -
சுண்டெலிப்பெண்ணே.
46
சூடம்சாம்பி ராணிபோட்டு
- சுண்டெலிப்பெண்ணே
சொக்கநாதரைக் கும்பிடடி
-
சுண்டெலிப்பெண்ணே.
47
கைகாலெல்லாம் சுத்தம்பண்ணி
-
சுண்டெலிப்பெண்ணே
கந்தசாமியைக் கும்பிடடி
- சுண்டெலிப்பெண்ணே.
48
மாரியாத்தாளையும்
காளியாத்தாளையும்
சுண்டெலிப்பெண்ணே
மறந்திடாமே கும்பிடடி -
சுண்டெலிப்பெண்ணே.
49
மச்சான்கொழுந்தன்
மாருக்கெல்லாம் -
சுண்டெலிப்பெண்ணே
மரியாதை கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.
50
மாமன் மாமியாள் ரெண்டுபேரையும்
-
சுண்டெலிப்பெண்ணே
மேன்மையா நடத்தணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.
51
|