பக்கம் எண் :

அண

குடும்பம்

207

அண்ணன்தம்பி மாரைநீ - சுண்டெலிப்பெண்ணே
    அரவணைச்சுப் பார்க்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.
     

52

அன்னியரையும் அடுத்தவரையும் -
சுண்டெலிப்பெண்ணே
    அன்பா ஆதரிக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.     

53

 பிச்சைகொடுக்க ணும்னாக்கூடச் -
சுண்டெலிப்பெண்ணே
    பட்சமாக் கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.     

54

மஞ்சள்குளிச்சு கொண்டைப்பூவச்சுச் -
சுண்டெலிப்பெண்ணே
    மனிசரை மயக்காதேடி - சுண்டெலிப்பெண்ணே.         

55

 பட்சபாதம் ஒண்ணும்இல்லாமே -
சுண்டெலிப்பெண்ணே
    பகுந்தாகாரம் கொடுக்கணுண்டி -
சுண்டெலிப்பெண்ணே.     

56

ஏழைபாழை ஏதுங்கேட்டால் -
சுண்டெலிப்பெண்ணே
    எடுத்தெரிந்து பேசாதேடி -
சுண்டெலிப்பெண்ணே. 
   

57

தர்மம் தலைகாக்குண்டி - சுண்டெலிப்பெண்ணே
    தயவைக்கை விடாதேடிநீ - சுண்டெலிப்பெண்ணே.         

58

தர்மம்செஞ்ச வேடனடி - சுண்டெலிப்பெண்ணே
    தர்மராசா வாப்பிறந்தான் -
சுண்டெலிப்பெண்ணே.     

59

ஆறிலேயும் சாவுதாண்டி - சுண்டெலிப்பெண்ணே
    நூறிலேயும் சாவுதாண்டி - சுண்டெலிப்பெண்ணே.         

60