மந
மந்திபோல ஏண்டிநீ
இன்னம்தூங்கிக்
கிட்டிருக்கே
வந்தேண்ணா பாத்துக்கடி
வள்ளலெல்லாம்
இறக்கிடுவேன்.
5
குந்தக்குந்தப்
பிடிச்சுத்தள்ளிக்
குமுகுமுன்னு உதைச்சிடுவேன்
எந்தமாமி உன்னைக்கட்டி
மாரடிச்சிக் கிட்டிருப்பா.
6
இந்தியாவில் எங்கேயானாலும்
போய்க்கொஞ்சம்
பார்த்துவாடி
ஏண்டிஎகத்தாளமாப்
பார்க்கிறாய்
தோண்டிடுவேன்
உன்கண்ரெண்டையும்.
7
மருமகள்
:
அத்தைஎன்னை
அடிக்காதே
அடிபணிவேன் நான்உனக்கு
மெத்தஎன்னை மிரட்டாதே
சுத்தபுண்ணியம்
உனக்கு.
8
சுத்தமான வேலைசெய்வேன்
கற்றுக்கொடு
நீஎனக்குப்
பத்திரமா வீட்டுவேலை
பார்த்துச்செய்வேன்
நான்உனக்கு.
9
அத்தை அடிஎங்கள்
அப்பன்கூட வேபிறந்த
அத்தை அடிஒரு
முத்தங்கூடக்
கொடுக்கிறேண்டி.
10
அத்தைஎன்னை வையாதே
அநியாயமாய்த்
திட்டாதே
குற்றம்ஒண்ணும் செய்யலையே
குந்திக்கிட்டு
ஏன்இருக்கே?
11
|