New Page 1
வெள்ளிப் பிடியரிவாள்
விடலைப்பிள்ளை கையரிவாள்
சொல்லி அடிச்சரிவாள்
சுழற்றுதடா நெல்கதிரை.
126
சாரட்டு வண்டிக்காரா
சலங்கைபோட்ட மாட்டுக்காரா
மாட்டை விரட்டாதேடா
நான்தாரேன் கேட்டுக்காசு.
127
வெள்ளாடு மேய்க்கமாட்டேன்
வேனிலிலே நிற்கமாட்டேன்
கம்பங்காடு காக்கச்சொன்னால்
காட்டைவிட்டுப்
போகமாட்டேன்.
128
நத்தத்து ரோட்டுவழி
நான்போறேன் ஒத்தைவழி
மின்னிட்டாம் பூச்சிபோலே
முன்னேவாடி பொன்மயிலே.
129
ஆட்டுக்காரா மாட்டுக்காரா
அடைமழைக்கு எங்கிருந்தாய்?
குறும்பன்கம்
பிளிக்குள்ளே
குறுகிக்கிட்டு நான்இருந்தேன்.
130
ஆல மரம்உறங்க
அடிமரத்துக் கிளிஉறங்க
உன்மடிமேல் நான்உறங்க
உலகம் பொறுக்கலையே.
131
பொட்டலிலே கிணறுவெட்டிப்
பொறுக்குக்காளை ரெண்டும்பூட்டி
காப்புப்போட்ட கறுத்தமச்சான்
கமலைபூட்டத் தெரியலையே.
132
|