New Page 1
பொட்டுமேலே பொட்டுவச்சுப்
பொட்டலிலே போறசாமி
பொட்டலிலே பெய்தமழை -
உன்
பொட்டுருகப் பெய்யலையே.
133
ஓடையிண்ணா நல்லஓடை
ஒளிந்திருக்கப் பூஞ்சோலை
தங்கக் கொழுந்தனுக்குத்
தலைபார்க்க நல்லஓடை.
134
சதுரகிரி மலையோரம்
சாய்ந்திருக்கும் திருகுகள்ளி
திருகுகள்ளிப் பூஎடுக்கத்
திரிந்தேன் சிலகாலம்.
135
ஓணான் முகத்தழகி
ஒட்டவச்ச காதழகி
ஒட்டவச்ச காதுக்கெல்லாம்
இட்டேனடி தங்கநகை.
136
அரிசி கடன்வாங்கி
அந்திக்கடை மீன்வாங்கி
போயிச் சமைக்கவேணும்
பொல்லாத மச்சானுக்கு.
137
சந்தனமும் மருதமுத்தும்
சமாசாரம் பேசையிலே
மஞ்சக்கண்ணு மாயாண்டி
மண்ணுக்கவ்வப் போட்டாண்டி.
138
போன வருசத்திலே
புகைவண்டிப் பஞ்சத்திலே
தாது வருசத்திலே
தந்தேனடி வெள்ளிரூபா.
139
|