New Page 1
வெள்ளைவெள்ளைச் சீலைக்காரி
வெகுநாள் உறவுக்காரி
வெள்ளைச்சீலை மங்கினாலும்
வேடிக்கைதான் மங்காதடி.
140
வெற்றிலையைக் கையில்வச்சு
வெறும்பாக்கை நாக்கில்வச்சுச்
சுண்ணாம்பு ஜாடைசொல்லி
சுத்துறான்உன் அத்தைமகன்.
141
வாட்டத்து வெற்றிலையை
வாய்நிறைந்த தம்பலத்தைப்
போட்டும் சிவக்கலையே
புண்ணியரே என்னசெய்வேன்!
142
செம்பிலே சிலைஎழுதி
சிவத்தபிள்ளை பேர்எழுதி
வம்பிலே தாலிகட்டி
வாழமனம் கூடலையே!
143
வாழ்க்கைப்பட மூக்காசை
வளையல்போடப் பேராசை
கொண்டவனைக் கண்டாக்கக்
குடலைப் பிடுங்குதடி.
144
உழுகாத மாடேநீ
உழவறியாக் காளைக்கண்ணே
நடக்காத மாடேநீ
நாணயமாத் தாறுவாங்கு.
145
ஆலம் விழுதுபோலே
அவபோகும் ரோட்டுப்பாதை
ஆல மரத்தைப்போலே
அலைந்தலைந்து வளைந்திருக்கு.
146
|