பக்கம் எண் :

கறுத

24

மலையருவி

கறுத்தபிள்ளை உன்ஆசை
        கழுத்தளவு தண்ணியிலே

    சிவத்தபிள்ளை பேராசை
        செத்தாலும் மறப்பதில்லை.
             

147

இடுப்புச் சிறுத்தவளே
        என்குணத்துக் கேத்தவளே

    நடையுஞ் சிறுத்தவளே
        நான்வாறேன் உன்னைத்தேடி. 
                 

148

மலைமங்கள தேவியே
        மலைக்குங்கீழே சடையாண்டியே

கொம்புதூக்கி ஐயனாரே
        குழந்தைமேலே வந்திறங்கு.
                  

149

கூந்தல் பனையோரம்
        குளிரான கானலோரம்

    ஏந்தும் பலகையிலே
        இருந்துவந்த பகவதியே!                    

150

ஏலை மலையுங்கண்டேன்
        ஏலமலைத் தோட்டங்கண்டேன்

    பாவிப்பயல் பஞ்சம்வந்து
        பண்ணைப்புரத் தோட்டங்கண்டேன்.
          

151

நாட்டுக்கு நாட்டுமட்டம்
        நம்மரெண்டு ஜோடிமட்டம்

    கோட்டுக்குப் போய்விட்டாலும்
        கோடிசனம் கையெடுக்கும்.
             

152

மலையிலே மாமரமாம்
        மாமனார் குத்தகையாம்

    காயெறிந்த குற்றத்தாலே
        கடுங்காவல் கிடைத்ததம்மா.
                   

153