பக்கம் எண் :

ஏலப

தெம்மாங்கு

25

ஏலப் பழம்எடுக்க
        இந்த ஆளு வேணாம்சாமி

    கொண்டை போட்ட சண்டாளியைக்
        கொண்டாங்கடா ரெண்டுபேரு
              

154

கஞ்சாவைக் கொஞ்சம்வச்சுக்
        காகிதத்தை ரொம்பவச்சு

    உட்கார்ந்து விற்கிறாராம்
        அப்பராணி செட்டியாரு.
                    

155

முட்டியிலே கூழுக்காய்ச்சி
        மூடிவைக்கும் பண்ணைப்புறம்

    அண்டாவிலே சோறாக்கி
        அள்ளிவைக்கும் கூடலூரு.
                   

156

சுக்காங்கல்லுச் சரளைபோலே
        சுரிச்ச கிழவன்வந்து

    குமரிகளைக் கண்டுக்கிட்டுக்
        கோதுறானாம் மீசைகளை 
                     

157

அத்தைமகன் தொத்தப்பயல்
        ஆளிலேயும் மட்டிப்பயல்

    வேப்பெண்ணெய் குடிக்கிப்பயல்
        உதைத்தாண்டி முதுகுமேலே
             

158

வாழையடித் தோட்டத்திலே
        வடக்குப்பார்த்த ரோதையிலே

    ரோதையிலே நான் இருக்க
        ரோட்டுவழி ஏண்டிபோறே?
   

159

தண்ணி கறுத்திருச்சு
        தவளைச்சத்தம் கேட்டுருச்சு

    புள்ளை அழுதிருச்சு
        புண்ணியரே வேலைவிடு.                      

160