பக்கம் எண் :

New Page 1

குடும்பம்

211

தேம்பித்தேம்பி ஏண்டி
        திணறிக்கிட் டழுகிறாய்
    சோம்பேறி நாயேநீ
        சும்மாஏண்டி அழுகிறாய்?
           

19

மருமகள்அடக்குசும்மா உன்னை
              அத்தையிண்ணு பார்த்தேனம்மா
          அடக்குசும்மா வாயை
              அடக்குசும்மா கையை.

20

உனக்கிருக்கு துடைப்பக்கட்டை
                எனக்கிருக்கு பழையமுறம்
          உனக்கிருக்கு திருட்டுக்கை
                எனக்கிருக்கு முரட்டுக்கை
               

21

பணக்கொழுப் போஉனக்குப்
                பார்க்கிறேண்டி ஒருகை
          இணக்கமாப் போனால்போச்சு
                இல்லாட்டி வணக்குவேண்டி.
            

22

ஏண்டிஎன்னை இப்படி
                ஏமாற்றப் பார்க்கிறே
          தலைநரைச்ச பெருச்சாளிக்குத்
                தலையில்கொம்பு முளைச்சிருக்கு.

23

எலும்புக்கூடு கிழக்கிழவிக்கு
                எகத்தாள மாயிருக்கு
          இலையும்குழையும் தின்னவளுக்கு
                எடுப்புமுறுக்கு ரொம்பஇருக்கு.         
     

24

தலைசீவத் தெரியாதவளுக்குத்
                தலைகாணி வேறிருக்கு
          . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . .

25

உன்குலையை அறுத்திடுவேன்
                குரங்கே நாயேபேயே
          உன்மயிரை அறுத்திடுவேன்
                போபோ மூதேவியே.
            
26