பக்கம் எண் :

212

மலையருவி

மாமியாள் : சோறாக்கத் தெரியாத
               சோம்பேறிப் பெண்ணுக்கு
           வீறாப்பு ஏதுக்கடி - கள்ளி
                வீறாப்பு ஏதுக்கடி?
       

27

தாவாரம் பெருக்கத்
                தெரியாத பெண்ணுக்குப்
           பூமாலை ஏதுக்கடி - கள்ளி
                பூமாலை ஏதுக்கடி?
              

28

புருசனைச் சாமிண்ணு
                பணியாத பெண்ணுக்குப்
           பொன்தாலி ஏதுக்கடி - கள்ளி
                பொன்தாலி ஏதுக்கடி?

29

பெருந்தீனி யைத்திண்ணும்
                பேயான பெண்ணுக்கு
           விருந்தாளி ஏதுக்கடி - கள்ளி
                விருந்தாளி ஏதுக்கடி?

30

மரியாதை இல்லாமல்
                வாய்பேசும் பெண்ணுக்கு
           மாமியாள் ஏதுக்கடி - கள்ளி
மாமியாள் ஏதுக்கடி?     
             

31

தாய்சொல்லைக் கேட்காத
நாடோடிக் கழுதைக்குத்
           தங்கநகை ஏதுக்கடி - கள்ளி
                தங்கநகை ஏதுக்கடி?

32

அண்ணன் தம்பிமாரை
                அழுகவச் சவளுக்கு
           அரண்மனை ஏதுக்கடி - கள்ளி
                அரண்மனை ஏதுக்கடி?

33

 கறுப்புப் பொட்டுவச்சுக்
                கண்ணடிக் கிறவளுக்குப்
           புருசனும் ஏதுக்கடி - கள்ளி
                புருசனும் ஏதுக்கடி?
       

34