ம
மாமியாள்
:
கட்டையடிதின்னக்
காலமாச்சு - இந்தக்
குட்டைச்சிறுக்கிக்குக்
கேலியாச்சு
மட்டிச்சிறுக்கியால்
மானம்போச்சு - இந்தப்
பட்டிப்பொறுக்கியால்
பங்கமாச்சு.
43
தட்டுவாணிபிள்ளைக்குத்
தங்கமாச்சு
ஊருசிரிக்கவும் காலமாச்சு
- எங்கள்
பேருபறக்கவு நேரமாச்சு
வம்சத்தில்இல்லாத
இக்குரங்கு - எங்களை
இம்சைப்படுத்துறா
செங்குரங்கு.
44
மருமகள்
:
குரங்குகுரங்குண்ணு
சொன்னியின்னால் - உன்
கோடாலிக்கொண்டையை
அறுத்திடுவேன்
கேலிபண்ணாதடி கிழக்குரங்கே
- உன்
சோலியைப்பாரடி
மடக்குரங்கே.
45
மாமியாகொடுமைக்கு
ஏத்தாப்போல - இந்த
மருமகஇருப்பாண்ணு
நினைச்சியாடி?
. . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
46
மாமியாஉடைச்சுட்டால்
மண்சட்டியாம் - ஆனால்
மருமகள் உடைச்சுட்டால்
பொன்சட்டியாம்
அடக்குடிஅம்மாஉன் ஆங்காரத்தை
- இனி
இடிப்பேண்டிஉன்னைஎன்
இஷ்டம்போலே.
47
பல்லும்இல்லைஉனக்குச்
சொல்லும்இல்லை - இப்போ
பாசாங்குபண்ணினால்
மோசம்போவாய்
நாட்டியக்குதிரைபோல்
ஆடாதேடி - நான்
நாட்டுத்தட்டுண்ணு
தெரியுமாடி?
48
|