பக்கம் எண் :

குடும்பம்

215

மாமியாள் :  தாயேஎன்தங்கமே தயவுசெய்துஎன்னைப்
                பேயைப்போல்ஆட்டாதே பொன்மணியே
           சொன்னசொல் லெல்லாம்நான் கேட்கிறேண்டி
                சொர்க்கலோ கம்போய்ச் சேருமட்டு
ம்.         

49

கண்ணேஉன்னைஇனித் திட்டமாட்டேன்
                என்னையும் நீஇனித் திட்டிடாதே
           . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . .    

50

மழையைநம்பி ஏலேலோ
                மண்இருக்க ஐலசா
           மண்ணைநம்பி ஏலேலோ
                மரம்இருக்க ஐலசா.

51

மரத்தைநம்பி ஏலேலோ
                கிளைஇருக்க ஐலசா
           கிளையைநம்பி ஏலேலோ
                இலைஇருக்க ஐலசா.
                

52

இலையைநம்பி ஏலேலோ
                பூவிருக்க ஐலசா
          பூவைநம்பி ஏலேலோ
                பிஞ்சிருக்க ஐலசா.

53

பிஞ்சைநம்பி ஏலேலோ
                காயிருக்க ஐலசா
           காயைநம்பி ஏலேலோ
                பழம்இருக்க ஐலசா.

54

பழத்தைநம்பி ஏலேலோ என்
                மகன்இருக்க ஐலசா
           மகனைநம்பி ஏலேலோ
                நீஇருக்க ஐலசா.

55

உன்னைநம்பி ஏலேலோ
                நான்இருக்க ஐலசா
           என்னைநம்பி ஏலேலோ
                எமன்இருக்க ஐலசா.

56