பக்கம் எண் :

ஆத

220

மலையருவி

ஆத்தாள்உன்னை அடித்தாளோ - கண்ணேஉன்
        அழகான கன்னத்திலே?

    நேத்தெல்லாம்நீ எங்கேபோனாய் - கண்ணேநீ
        நெல்வயலைப் பார்த்தையாடி?                   

15

காத்திருந்தான் காவல்காரன் - கண்ணேநீ
        கண்டையாடி பொன்கண்ணாலே

    களமெல்லாம் கதிர்இருக்கு - கண்ணேநம்
        காளியம்மா காவல்காப்பாள்.

மூட்டைப்பூச்சி கடிச்சிருச்சோ - கண்ணேஉன்
        மேனியெல்லாம் நடுநடுங்க?

    தெள்ளுப்பூச்சி கடிச்சிருச்சோ - கண்ணேஉன்
        தேகம்எல்லாம் நடுநடுங்க?

    மெத்தைமேலே தொட்டிலிலே - என்கண்ணே
        மெதுவாகப் படுத்தஉன்னைப்
        

20

பூவிரித்த தொட்டிலிலே - கண்ணேஉன்னைப்
        பூச்சிவந்து கடிச்சிருச்சோ?

    குடைக்குங்கீழே படுத்தஉன்னைக் - கண்ணே
        கொசுகுவந்து கடிச்சிருச்சோ?

    பஞ்சணைமேல் படுத்தஉன்னைக் கண்ணே
        பல்லிபய முறுத்திருச்சோ?

பச்சைக்கிளி பட்டுக்கிளி - கண்ணேநீ
        பயப்படாதே பல்லிக்கெல்லாம்.

    பஞ்சவர்ணப் பட்டுக்கிளி - கண்ணேநீ
        படுத்துத்தூங்கு பயமில்லாமே.                

25

அட்டை கடிச்சிருச்சோ - கண்ணேநீ
        அசந்துநல்லாத் தூங்கையிலே?

    தாதிப்பெண்ணு கூடிவரக் - கண்ணேநீ
        தங்கஊஞ்சல் ஆடிவர

    நாலுமணி நேரத்திலே - கண்ணேஉன்னை
        நாகராசன் காவல்காப்பான்.