அஞ
அஞ்சாதே கலங்காதே -
கண்ணேஉன்னை
அரண்மனையே காவல்காக்கும்.
பஞ்சுமெத்தை பட்டுமெத்தை
கண்ணேஉனக்கு
பரமசிவன் கொடுத்தமெத்தை.
30
மாமனார் கொடுத்தமெத்தை
- கண்ணேஉனக்கு
மல்லிகைப்பூச் செண்டுமெத்தை.
அக்கா கொடுத்தமெத்தை -
கண்ணேஉனக்கு
அழகான தங்கமெத்தை.
மேலு வலிக்காமே - கண்ணேநீ
மெத்தைமேலே படுத்துறங்கு.
_______
மீன் பாட்டு
அயலூர்க் குளத்திலேதான்
- கண்ணே
அயிரைமீனு ஆயிரமாம்.
அயிரைமீன் பிடிக்கப்போய்
- கண்ணேஉன்
அப்பன்இப்போ வந்திட்டாரே
அயிரைமீனும் ஆரல்மீனும்
- கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு.
வாளைமீனும் வழலைமீனும் -
கண்ணடி
விதவிதமா அம்புட்டுச்சாம்.
அரண்மனைக்கு ஆயிரமாம் -
கண்ணேஉன்
அப்பனுக்கு ஆயிரமாம்.
5
ஆயிரமும் கொண்டுபோய்க்
- கண்ணடி
அப்பன்விற்று வீடுவர
அண்டைவீடும் அடுத்தவீடும்
- கண்ணடி
ஆச்சரியப் பட்டார்களாம்.
கெண்டைமீனும் கெளுத்திமீனும்
- கண்ணடி
குரவைமீனும் பரவைமீனும்
|