பக்கம் எண் :

எல

222

மலையருவி

எல்லாமீனும் ஏழாயிரம் - கண்ணேநான்
        ஆயிரத்தைப் பிரித்துவச்சேன்

    பிரித்தமீனு ஆயிரத்திலே - கண்ணேநான்
        பிரியமாக ஆறெடுத்தேன்.                       

10

அயலூரு சந்தையிலே - கண்ணேநான்
        ஆறுமீனை விற்றுப்போட்டேன்.

    அரைச்சவரன் கொண்டுபோய்க் - கண்ணேஅதை
        அரைமூடியாச் செய்யச்சொன்னேன்.

    அரைமூடியைஉன் அரைக்குப்போட்டுக் - கண்ணேநான்
        அழகுபார்த்தேன் ஆலத்தியிட்டு.

    அத்தைமாரும் அண்ணிமாரும் - கண்ணே உன்
        அழகைப்பார்த்து அரண்டார்களே

    அரண்மனையார் ஓடிவந்து - கண்ணேஉன்னை
        அதிசயமாப் பார்த்தார்களே.
    

15

ஆராய்ச்சி மணியடித்து - கண்ணேஉன்னை
        அயலூராரே பார்த்தார்களே.

________

கோயில்

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.

    ஆடிருக்கு மாடிருக்கு - கண்ணேஉனக்கு
        அழகான வீடிருக்கு.

    அத்தையம்மாள் வீட்டிலேதான் - கண்ணேஉனக்கு
        ஆளியனும் தான்இருக்கான்.

    ஆலம் விழுதுபோல - கண்ணேநீ
        அழகான மயிரழகி.

    சுப்ரமண்யர் கோயிலிலே - கண்ணே
        சொகுசான தேரிருக்கு.                    

5