New Page 1
மோளங்களும் தாளங்களும்
முழங்குதடி
கோயிலிலே.
ஆண்பிள்ளையும் பெண்பிள்ளையும்
- கண்ணேஅங்கே
ஆடுறாங்க பாடுறாங்க.
தாசிகளும் வேசிகளும் -
கண்ணேஅங்கே
தாளம்போட்டு ஆடுறாங்க.
பறத்தெரு வீதியிலே - கண்ணேஅங்கே
பறச்சிகூடி நிற்கையிலே.
இடைத்தெரு வீதியிலே -
கண்ணேஅங்கே
இடைச்சிகூடி நிற்கையிலே.
10
வலைத்தெரு வீதியிலே -
கண்ணேஅங்கே
வலைச்சிகூடி நிற்கையிலே.
ஊர்கோலம் வாறாராம் -
கண்ணே
உசத்தியான சுப்பிரமண்யம்.
பாவிகளும் கோவிகளும் -
கண்ணே
பறந்தடிச்சு ஓடிவராங்க.
கள்ளன்களும் பள்ளன்களும்
- கண்ணே
கலந்தடிச்சு ஓடிவராங்க.
கடலவலைக் கலந்துக்கிட்டு
- கண்ணே
கடவுளுக்குக் கொடுக்கிறாங்க.
15
கண்மணியே பொன்மணியே -
கண்ணேநீ
கண்டையாடி காட்சியெல்லாம்?
பூஇறைச்சான் பூசாரி - கண்ணேநம்
பூமிக்கெல்லாம்
மழைபெய்ய.
நெய்விளக்கு ஏத்திவச்சான்
- கண்ணே
நிறையநம்ம நிலம்விளைய.
|