பட
பட்டாக்கத்தி வீசையிலே
கண்ணேஅவன்
பஸ்பமானான் பகையாளி.
15
மாடுரெண்டும் மிரண்டோட
- உங்கப்பன்
மதயானைபோல்
பின்ஓடி
மடக்கினாரு மாடுகளைக் -
கண்ணே அவர்
மத்தியான வேளையிலே.
________
வேட்டை
அடுப்புமூட்டி ஆணங்காய்ச்சிக்
கண்ணேநீ
அசந்துநல்லாத் தூங்கையிலே
ஆரடித்தார் நீஅழுக - கண்ணேநீ
அப்பன்கிட்டே
சொல்லிவிடு
கானலிலே நாணற்புல் - கண்ணேஅந்தக்
கலைமான் ஒதுங்கும்புல்
பளப்பளப்பாப் பச்சைப்புல்
- கண்ணேநம்
பசுமாடெல்லாம் தின்னும்புல்
கருகருன்னு வளரும்புல் - கண்ணேநம்
காளைமாடு தின்னும்புல்
5
பசுங்கிளியே பாத்தையாடி
- கண்ணேநம்
பரமசிவன் படுத்தபுல்லு?
கரடிபுலி ஆனைசிங்கம் -
கண்ணேநீ
கண்டையாடி கானலிலே?
காட்டுமாடும் கேளையாடும்
- கண்ணேநீ
காராம்பசுவும் கண்டையாடி?
தேனேஎன் திரவியமே - கண்ணேநீ
தெவிட்டாத செங்கரும்பே
மானே மரகதமே - கண்ணேநீ
மகராசன் மருமகளே.
10
|