பக்கம் எண் :

226

மலையருவி

வில்லுகொண்டு வேட்டைக்குப்போய்க் - கண்ணேஅந்த
        வேடரெல்லாம் வெலவெலக்க

    ஈட்டிகொண்டு காட்டுக்குப்போய் - மகாராசா
        மாட்டினாராம் எட்டுப்புலி.

    மானுமரை தான்நடுங்க - மகாராசா
        மந்திரவாள் சுற்றிட்டாராம்.

    சிறுபுலியும் கரும்புலியும் - மகாராசா
        சின்னபின்னம் செஞ்சுட்டாராம்.

    முள்ளம்பன்றி குள்ளம்பன்றி - கண்ணே
        முணுமுணுத்த முரட்டுப்பன்றி

15

காட்டுப்பன்றி மேட்டுப்பன்றி - மகாராசாவைக்
        கண்டோடிச்சாம் கானலிலே.

_______

அறுவடை

ஆராரோ ஆரிரரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.

    கரிசல்காட்டுப் புழுதியிலே - கண்ணேநான்
        கதிரறுக்கப் போகையிலே

    கஞ்சிக் கலயங்கொண்டு - கண்ணேநான்
        களத்துக்கிட்டப் போகையிலே

    அரிவாளைத்தான் இடுப்பில்வைச்சு - கண்ணேநான்
        ஆடிப்பாடிப் போகையிலே

    வெற்றிலையும் போட்டுக்கையைக் - கண்ணேநான்
        வீசிவீசிப் போகையிலே                     

5

சுருக்குப்பையைச் சொருகிக்கிட்டுக் - கண்ணேநான்
        சுற்றிமுற்றிப் பார்க்கையிலே

    சாமைக்கதிர் அறுக்கையிலே - கண்ணேநல்ல
        சாரல்மழை பெய்ததடி.