பக்கம் எண் :

கம

தாலாட்டு

227

கம்பங்கதிர் அறுக்கையிலே - கண்ணேநல்ல
        கனத்தமழை பெய்ததடி.

    நெல்லுக்கதிர் அறுக்கையிலே - கண்ணே அங்கே 
        நல்லமழை பெய்ததடி.

    சோளக்கதிர் அறுக்கையிலே - கண்ணேஅங்கே
        சோனைமாரி பெய்ததடி.                    

10

கதிரெல்லாம் கட்டுக்கட்டாக் - கண்ணேநான்
        கட்டிவச்சேன் கைவலிக்க.

    நாலாயிரம் சனத்தோடே - கண்ணேஅங்கே
        நானும்போனேன் நாற்றுநட.

    ஆளுக்கு நாலாயிரம் - கண்ணேநான்
        அடுக்கிவச்சேன் அலங்கியைப்போல்.

    குவித்துவச்ச நாற்றெல்லாம் - கண்ணேஆள்
        கும்பலிலே பறந்திருச்சு.

    பாத்திகட்டி நாற்றுநட்டேன் - கண்ணேநான்
        பரமசிவன் தயவாலே.                      

15

பூமாதேவி தயவாலே - கண்ணேநம்
        பூமியெல்லாம் விளைஞ்சிருச்சு.

    சோழவந்தான் காளைசோடி - கண்ணேஇன்னம்
        பாளையங்கோட்டைக் காளைசோடி

    நெல்லூரு நெட்டைச்சோடி - கண்ணேஇன்னம்
        கடலூரு கட்டைச்சோடி

    சமுத்தூரு காளைகூடக் - கண்ணேஅங்கே
        சூட்டிக்கையாச் சூடடிக்கும்.

    வட்டமாத்தான் வருகுதம்மா - கண்ணேஅந்த
        வடிவழகுக் காளையெல்லாம்.
            

20

வருகுதம்மா ஒண்ணொண்ணாய்க் - கண்ணேஅந்த
        வளத்தியான காளையெல்லாம்.

    குடுகுடுன்னு வருகுதம்மா - கண்ணேஅந்தக்
        குட்டையான காளையெல்லாம்.