பக்கம் எண் :

மய

228

மலையருவி

மயிலைக்காளை வருகுதம்மா - கண்ணேஅந்த
        மரைக்காளையும் வருகுதம்மா.

    சலங்கைபோட்ட காளையெல்லாம் - கண்ணேஅங்கே
        சரசரன்னு வருகுதம்மா.

    கூடுகொம்புக் காளையெல்லாம் - கண்ணேஅங்கே
        கூடிக்கூடி வருகுதம்மா.                     

25

வீரிகொம்புக் காளையெல்லாம் - கண்ணேஅங்கே
        விரைசாவிரைசா வருகுதம்மா.

    சவலைபாய்ந்த செவலைக்காளை - கண்ணேஅங்கே
        சருக்கிவிழுந்து வருகுதம்மா.

    குளுமையிலே நெல்லரசி - கண்ணேநீ
        இளமையிலே மகராசி.

    கொஞ்சணுமோ அம்மாஉன்னைக் - கண்ணேநீ
        பஞ்சவர்ணக் கிளிதானோ?

    ரத்தினமே பத்தினியே - கண்ணேநீ
        பத்தியான ரதிதானோ?                      

30

__________

உபதேசம்

மார்கழி மாசத்திலேதான் - கண்ணேநீ
        மகாராசாவைப் பாக்கையிலே

    தைப்பொங்கலு காலத்திலே - கண்ணேநீ
        தயிருஞ்சோறும் தின்கையிலே

    மாசிமாசக் கடைசியிலே - கண்ணேநீ
        மாமன்வீடு போகையிலே

    பங்குனி மாசத்திலே - கண்ணேநீ
        பங்குச்சொத்தை வாங்கையிலே

    சித்திரைமாசத் துவக்கத்திலே - கண்ணேநீ
        சீர்வரிசை வாங்கையிலே
      

5