New Page 1
வைகாசி மாசத்திலே -
கண்ணேநீ
வயலைச்சுற்றிப்
பார்க்கையிலே
ஆனிமாசக் கடைசியிலே -
கண்ணேநீ
அண்ணன்வீடு போகையிலே
ஆடிமாசம் முடியுமுன்னே - கண்ணேநீ
அடியெடுத்து வைக்கையிலே
அகஸ்மாத்தா ஆவணியில் -
கண்ணேநீ
அரண்மனைக்குப் போகையிலே
பெரட்டாசி மாசத்திலே -
கண்ணேநீ
பேறுகாலத்துப் போகையிலே
10
ஐப்பசி மாசமெல்லாம் -
கண்ணேநீ
அப்பன்வீடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும்
- கண்ணேநீ
கடவுளுக்குக் கையெடடி.
திங்கட் கிழமையிலேதான்
- கண்ணேநீ
தேர்பார்க்கப்
போகையிலும்
செவ்வாய்க் கிழமையிலேதான்
- கண்ணேநீ
செவந்திப்பூ வைக்கையிலும்
புதன்கிழமை விதம்விதமாக்
- கண்ணேநீ
பூந்திலட்டுத் தின்கையிலும்
15
வியாழனெல்லாம் வெளியேறாமே
- கண்ணேநீ
வீட்டுக்குள்ளே
இருக்கையிலும்
வெள்ளியிலே விளக்கேற்றிக்
- கண்ணேநீ
வீணைச்சுதி ஏற்றையிலும்
சனிக்கிழமை பணத்தைஎண்ணிக்
- கண்ணேநீ
சந்தோசமா இருக்கையிலும்
ஞாயிற்றுக் கிழமையிலும்
- கண்ணேநீ
ஞாயவழி நடந்துபோடி.
|