|
கதம
கதம்பம்
மாங்காய் எறிந்தகம்பு -
கண்ணே
மண்டபமே
போய்விழுகும்.
தேங்காய் எறிந்தகம்பைக்
- கண்ணேநீ
தள்ளிநட கொண்டாரேன்.
பச்சை இலுப்பைவெட்டிக் -
கண்ணே
பால்வடியத் தொட்டில்கட்டித்
தொட்டிலுக்கும் கீழிருக்கும்
- கண்ணே
துணையிருக்கும் சம்மனசு.
கோபாலனைக் கூப்பிடுங்கள்
- கண்ணே
கோபாலுக்கு மாலையிட.
5
சங்குபோ லேமின்னிக் -
கண்ணே
சமுத்திரம்போல் காலூணி
முத்திடிச்சு மாக்கொழித்துக்
- கண்ணே
முற்றமெல்லாம் கோலமிட்டுப்
பச்சைமூங்கில் லட்சம்வெட்டிக்
- கண்ணே
பலமுள்ள மூங்கில்நட்டு
முந்நூறு மூங்கில்வெட்டிக்
- கண்ணே
முதல்மூங்கில் தான்எடுத்து
நானூறு மூங்கில்வெட்டிக் -
கண்ணே
நல்லமூங்கில் தான்எடுத்து
10
ஐந்நூறு மூங்கில்வெட்டிக்
- கண்ணே
அந்தமூங்கில் தான்எடுத்து
கோம்பையிலே கூடாரம் -
உன்மாமன்
கொத்துமல்லி யாவாரம்
கொத்துமல்லி விற்றவுடன்
- கண்ணே
குவளைசெஞ்சு வருவாரு.
மதுரையிலே கூடாரம் - உன்மாமன்
மல்லிகைப்பூ யாவாரம்
_______________________________________________________
12. யாவாரம் -
வியாபாரம்.
|