பக்கம் எண் :

மல

தாலாட்டு

231

மல்லிகைப்பூ விற்றவுடன் - உன்மாமன்
        மாலைசெஞ்சு வருவாரு.

15

வைகை பெருகிவரநீ - கண்ணே
        வாளைமீன் துள்ளிவரத்

    துள்ளிவந்த மீனுக்கெல்லாம் - உங்கப்பன்
        தூண்டிவளை போட்டாரு.

    பச்சைமூங் கில்வெட்டிக் - கண்ணே
        பசுமூங்கில் நாருரிச்சுக்

    காட்டுக் கரும்பே - கண்ணே
        கணுவில்லாச் செங்கரும்பே

    வேலிக் கரும்பே - கண்ணே
        விலையில்லா மாணிக்கமே
       

20

சாய்ந்துகணக் கெழுதுவார் - கண்ணே
        சமத்துள்ள உன்தகப்பன்.

குந்திக் கணக்கெழுதும் - கண்ணே
        கோபாலனோ உன்மாமன்?

    வாழைவச்சேன் கரும்புவச்சேன் - கண்ணே
        வாழைக்குள்ளே தேனைவச்சேன்.

    தேன்எடுக்கப் போகையிலே - கண்ணே
        தேனீவந்து கொட்டிருச்சு.

    மூணுதட்டுக் கறியெடுத்துக் - கண்ணே
        முட்டியிலே ஆணங்காச்சி
                    

25

எலும்பு விழுகலேண்ணு - கண்ணே
        எட்டி உதைக்கிறையோ?

    குழம்புனக்குப் பத்தலேண்ணு - கண்ணே
        கோவங்கூட வந்திடுமா?

________

மாமன் பரிசு

ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.