பக்கம் எண் :

கண

232

மலையருவி

கண்ணே உறங்குறங்கு - கண்ணேநீ
        கானகத்து வண்டுறங்கு

    பொன்னே உறங்குறங்கு - பொன்னேநீ
        பூமரத்து வண்டுறங்கு.

    சீராடத் தொட்டிலிலே - கண்ணேநீ
        என்மேலே சாய்ந்தாடப்

    பொன்தூரி மேலிருந்து - கண்ணேநீ
        பொய்யுறக்கம் கொண்டாயே.
           

5

மதுரையிலே கூடாரம் - உங்கமாமன்
        மல்லிகைப்பூ யாவாரம்.

    மல்லிகைப்பூ விற்றவுடன் - உன்மாமன்
        மாலைஒண்ணு கொண்டாருவார்.

    கோடையிலே கூடாரம் - உன்மாமன்
        கொத்துமல்லி யாவாரம.்

    கொத்துமல்லி விற்றவுடன் - உங்கமாமா
        கொலுசுபண்ணிக் கொண்டாருவார்.

_______

நோயும் மருந்தும்

 ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
        ஆரிரரோ ஆராரோ.

    இருமக்கூடச் சத்தில்லையோ - கண்மணியே
        இடிஇடித்த சத்தத்திலே?

    சாரல்மழை பெய்யுதம்மா - கண்மணியே
        சனங்களெல்லாம் ஓடுதம்மா.

    நெஞ்சுச்சளி பிடிச்சுக்கிட்டுக் - கண்ணேஉனக்கு
        நிற்கக்கூடச் சத்தில்லையோ?

    மண்டையிடி பொறுக்கலையோ - கண்ணேஉனக்கு
        மருந்துரைத்துப் போடட்டுமா?                

5

கோரோசனை கொடுக்கட்டுமா - கண்ணேஉனக்குக்
        குருமாத்திரை கொடுக்கட்டுமா?