பக்கம் எண் :

உடம

தாலாட்டு

233

உடம்பெல்லாம் நோகுதம்மா - கண்ணே உனக்கு
        ஒத்தடம்நான் கொடுக்கட்டுமா?

    ஏலமும் இஞ்சிச்சாறும் - கண்ணே உனக்கு
        எட்டுச்சொட்டுக் கொடுக்கட்டுமா?

    மண்டையிடித் தைலங்கூடக் - கண்ணே உனக்கு
        மாமன்வாங்கி வாராரு.

    தொந்தரவு செய்யாமேநீ - கண்மணியே
        தொட்டியிலே தூங்கிடம்மா.
  

10

மயங்காதே கலங்காதே - கண்ணேஉனக்கு
        மாரியாத்தாள் சுகங்கொடுப்பாள்

    கைகாலு வீக்கத்துக்கு - கண்ணேஉனக்குக்
        கணைஎண்ணெய் வாங்கித்தாரேன்.

    மலைபோல வந்தாலும் - கண்மணியே
        பனிபோல விலகிடும்மா.

    அம்மாவாசி போயிடுச்சுக் - கண்ணேநீ
        அஞ்சவேண்டாம் ஒண்ணுக்குமே.

    ஆயாசமா இருக்குதம்மா - கண்ணே காளி
        யம்மா உன்னைக் காப்பாளம்மா.
      

15

பழனியாண்டவன் கோயிலுக்குக் - கண்ணேநாம்
        பங்குனிமாசம் போகலாமே.

    நேத்திக்கடன்  முடியெடுப்பைக் - கண்ணேநாம்
        நிறைவேற்றி வரலாமம்மா.

    வயிற்றுளைச்சல் மிஞ்சிப்போய்க் - கண்ணேஉனக்கு
        வயிற்றுவலி வந்திருச்சா?

    வெற்றிலையும் உப்பும்வச்சுக் - கண்மணியே
        வெறும்வயிற்றில் தின்னுடம்மா.

    குடலேற்றம் என்றிட்டாலும் - கண்ணேகறுப்பி
        குடல்தட்டுவாள் பயப்படாதே.                 

20

_______