|
New Page 1
‘தூங்கு’
ஆராரோ ஆராரோ கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
கண்ணே நவமணியே - கண்ணேநீ
கானலிலே பிறந்தாயோ?
என்னநான் சொல்வேனோ -
கண்ணேநீ
இந்திரனோ
சொல்லிவிடு?
கொட்டிவைத்த முத்தே -
கண்ணேநீ
குவித்திவைத்த ரத்தினமே
கட்டிப் பசும்பொன்னே -
கண்ணேநீ
கட்டிமுத்தம் கொடுப்பாயே.
5
சிரியம்மா சிரிச்சிரு -
கண்ணேநீ
சித்திரப்பூந் தொட்டியிலே.
கரும்புரசமே - கண்ணேநீ
கசக்காத கல்கண்டே
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆறுமுகன் பிறந்தானோ?
மாத்துயர்ந்த பொன்னே -
கண்ணேநீ
மண்டலத்து ராசாவோ?
பூத்த புதுப்பூவே - கண்ணேஉன்
பொக்கிசத்தைப்
பார்த்தாயோ?
10
மானே மருக்கொழுந்தே -
கண்ணேநீ
மலர்விரிந்த மல்லிகைப்பூ
காட்டுக் குயிலே - கண்ணேநீ
கண்டெடுத்த பாட்டுக்குயில்.
புள்ளைக்கலி தீர்க்கவந்த
- கண்ணேஎன்
பொன்மானே தூங்கம்மா.
மாயன் மகளுக்குக் - கண்ணேநீ
மாப்பிள்ளையாய் வந்தவனோ?
|