பக்கம் எண் :

த

தாலாட்டு

235

தாய்சொல்லைத் தட்டாதே - கண்ணேநீ
        தகப்பன் சொல்லைத் தவறாதே.

15

சீதைக்கு அதிபதியோ - கண்ணேநீ
        சிலையேந்தும் ரகுபதியோ?

    ஒருமாங்கனிக்குக் - கண்ணேநீ
        உலகமெல்லாம் சுற்றினையோ?

    பெருமாள் மருமகனோ - கண்ணேநீ
        பெண்ரதிக்கு மாப்பிள்ளையோ?

    கருப்புச் சிலையானோ - கண்ணேநீ
        கன்னிவள்ளி நாயகனோ?

    பரமசிவ னைஅடித்த - கண்ணேநீ
        பாண்டியன் நீதானோ?                    

20

ஆரடித்து நீஅழுதாய் - கண்ணேநீ
        அழுதகண்ணீர் வடிகிறதே.

பேரைநீ சொல்லிவிடு - கண்ணே அவனைப்
        பெருவிலங்கு போட்டிடுவேன்.

    அத்தைஅடித்தாளோ - கண்ணேநீ
        அழுதகண்ணைத் துடைத்தாளோ?

    கொஞ்சம் பொறுத்துக்கொள் - கண்ணேநான்
        சந்திரனைக் கூப்பிடுறேன்.

    பாட்டி அடித்தாளோ - கண்ணேஉனக்குப்
        பால்ஊற்றும் கையாலே!                    

25

கூப்பிட்டுநான் கேக்கட்டா - கண்ணேநான்
        கொஞ்சம்அவளைப் பார்க்கட்டா?

    மாமி அடித்தாளோ - கண்ணேஉனக்கு
        மைவைக்கும் கையாலே?

    தம்பி அடித்தானோ - கண்ணேஉனக்குத்
        தயிர்ஊற்றும் கையாலே?

    அக்காள் அடித்தாளோ? - கண்ணேஉன்
        அம்மான்மார் வைதார்களோ?