|
வ
வீம்புக்கு ஏன்தேம்புறாய்
- கண்ணேநீ
வீணாக ஏன்தேம்புறாய்?
30
பெரியம்மா அடித்தாளோ -
கண்ணேஉன்னைப்
பெற்றவள்தான் அடித்தாளோ?
அறியாமே செய்தாலும் -
கண்ணேநீ
ஆர்கிட்டேயும்
சொல்லாதே.
தொட்டிக்குள்ளே துள்ளித்துள்ளிக்
- கண்ணேஎன்
துரையேநீ தூங்கிடம்மா.
ஆலம் பூப்போலே - கண்ணேநீ
அத்திமரப் பூப்போலே
தேம்பி அழுகாதே - கண்ணேஎன்னைத்
திட்டிக்கிட்டு
இருக்காதே.
35
வாடாத பூவே - கண்ணேநீ
வானத்திலே தாராவோ?
தேடாத திரவியமோ - கண்ணேநீ
தெவிட்டாத தெளிதோனோ?
கோட்டை அதிகாரி - கண்ணேஉன்
கொடிபறக்கு தாகாசம்.
கேட்டதெல்லாம் நான்தருவேன்
- கண்ணேநீ
கெஞ்சாமே
கொஞ்சிக்கேளு.
ஆனைவிற்கும் வர்த்தகனாம்
- உன்மாமன்
சேனைக்கெல்லாம் அதிகாரியாம்.
40
சின்னண்ணன் வந்தானோ -
கண்ணேஉனக்குச்
சின்னச்சட்டை கொடுத்தானோ?
பட்டுஜவுளிகளும் - கண்ணேஉனக்குப்
பலவர்ணச் சட்டைகளும்
பட்டுப்புடவைகளும் - கண்ணேஉனக்குக்
கட்டிக்கிடக் கொடுத்தானோ?
பொன்னால் எழுத்தாணியும்
- கண்ணேஉனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்.
|