|
கன
கன்னாரே பின்னாரெண்ணு
- கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ?
45
சின்னஞ்சிறு விரலுக்குக்
- கண்ணே
சிறப்பான மோதிரமும்
தன்னந் தனியாவந்து
தந்தானோ சின்னண்ணன்?
வஞ்சிமார் கையேந்திக்
- கண்ணே
வகைவகையாய்த் தாலாட்டிக்
கொஞ்சி முலைகொடுப்பார்
- கண்ணேநீ
கோணாமல் குடிச்சுக்கம்மா.
வட்டக் கலசத்திலே - கண்ணேநீ
வாய்நிரம்பப் பால்குடிச்சு
50
வாகான தொட்டியிலே - கண்ணேநீ
வச்சிரம்போல் தூங்கிடம்மா.
_________
ஆற்று வருணணை
ஆராரோ ஆராரோ - கண்ணேநீ
ஆரிரரோ ஆராரோ.
ஆறோடுதாம் ஆறோடுதாம் -
கண்ணேநம்
அல்லிமுடி
போல்சுருண்டு.
விடியற்கால நேரத்திலே -
கண்ணேநம்
வீமன்முடி
போல்சுருண்டு.
கஞ்சிப்பொழுது நேரத்திலே
- கண்ணேநம்
காளிமுடி போல்சுருண்டு.
மத்தியான நேரத்திலே -
கண்ணேநம்
மாரிமுடி போல்சுருண்டு.
5
பொழுதுசாயும் நேரத்திலே
- கண்ணேநம்
பொம்மிமுடி போல்சுருண்டு
மாடடையும் நேரத்திலே -
கண்ணேநம்
மதனன்முடி
போல்சுருண்டு.
|