பக்கம் எண் :

வ

238

மலையருவி

விளக்குவைக்கும் நேரத்திலே - கண்ணேநம்
        வீரிமுடி போல்சுருண்டு.

    ராப்பொழுது நேரத்திலே - கண்ணேகெட்ட
        ராக்கச்சிசடை போல்சுருண்டு.

    நடுச்சாம நேரத்திலே - கண்ணேநம்
        நளன்முடிபோ லேசுருண்டு.
       

10

குருவிகத்தும் நேரத்திலே - கண்ணேநம்
        குப்பிமுடி போல்சுருண்டு.

    விடிவெள்ளி நேரத்திலே - கண்ணேநம்
        விக்ரமாதித் தன்முடிபோல்.

    நெளிநெளியா ஓடுதம்மா - கண்ணேஅந்த
        நீலவர்ணத் தண்ணீரெல்லாம்.

    சுளிசுளியா ஓடுதம்மா - கண்ணேஅந்தச்
        சுத்தமான ஆற்றுத்தண்ணீர்.

    புரட்டாசி மாசத்திலே - கண்ணேரெம்பப்
        புரண்டோடுதாம் மழைத்தண்ணீரும்.            

15

ஆற்றிலிறங்க முடியாதே - கண்ணேஅந்த
        அடைமழைக் காலத்திலே.

    அழகான பாலம்ஒண்ணு - கண்ணேநம்
        ஆற்றுமேலே இருக்குதம்மா.

    ஆடுகளும் மாடுகளும் - கண்ணேஉன்
        அம்மான்வீட்டுப் பிள்ளைகளும்

    வரிசைவரிசையா வருகுதம்மா - கண்ணேநல்ல
        வர்ணம்போட்ட வண்டிகளும்.

    பாலத்திலே பலவிதமாம் - கண்ணேநீ
        பயப்படாதே பார்த்தாலும்.                     

20

கால்வாயிலே கனதண்ணின்னா - கண்ணேஅதைக்
        கடக்கரெண்டு கம்புபோதும்.

    ஓடையிலே கனதண்ணின்னா - கண்ணேஅதுக்கு
        உத்தரம்ஒண்ணு ரெண்டுபோதும்.