பக்கம் எண் :

ச

தாலாட்டு

239

சின்னஆற்றைக் கடக்கணுன்னா - கண்ணேஅதுக்குச்
        சின்னமரப் பாலம்போதும்.

    பெரியாற்றைக் கடக்கணுன்னா - கண்ணேஅதுக்குப்
        பெரியமரம் போதாதடி.

    சர்க்காரு கட்டும்பாலம் - கண்ணேஅது
        சரியான இரும்புப்பாலம்.                       

25

கால்வாய்க்கெல்லலம் கட்டும்பாலம் - கண்ணேஅது
        கணக்கான கல்லுப்பாலம்.

    தொட்டிபோலச் செய்துவைத்த - கண்ணேஅந்தத்
        தொங்குபாலம் சர்க்கார்பாலம்.

    பாலத்துக்கு ஏற்றாப்போலே - கண்ணேஅதுக்கு
        ஓரத்தில்கை பிடிச்சுவராம்.

    மாடுகளைக் குளிப்பாட்டக் - கண்ணேஅந்த
        மழைக்காலம் வசதிஇல்லை.

    ஆற்றில்வெள்ளம் அடித்துவரக் - கண்ணேஉன்
        அண்ணன்கூட அலைமோதுவான்.             

30

நாகரிகக் காரருக்குக் - கண்ணேஆற்றில்
        நல்லமாதிரி போட்இருக்கும்.

    குறைப்படிப்புக் காரருக்குக் - கண்ணேநல்ல
        சுரைக்குடுக்கை தானிருக்கும்.

    காட்டு மிருகத்துக்கும் - கண்ணேநம்
        வீட்டு மிருகத்துக்கும்.

    கைகாலுக்குப் பலங்கொடுத்துக் - கண்ணேநீச்சுக்
        கடவுள்கற்றுக் கொடுத்தாராம்.

    கணக்கில்லாத மீன்களுக்கும் - கண்மணியே
        கணக்கில்லாத தவளைக்குமே.                

35

தாவரமாம் தண்ணிக்குள்ளே - கண்மணியே
        தண்ணிப்பாம்புக்குங் கூடத்தான்.

_______________________________________________________

    31. போட் -
Boat.