பக்கம் எண் :

New Page 1

240

மலையருவி

வெயிலடிக்கும் நேரத்திலே - கண்மணியே
        வெளிவருமாம் மீன்களெல்லாம்.

    நாரைகளும் கொக்குகளும் - கண்மணியே
        நல்லநல்ல குருவிகளும்.

    பறக்குமாம் தண்ணிக்குமேலே - கண்மணியே
        பயம்கொஞ்சங்கூட இல்லாமே.

    சின்னஞ்சிறு மீனையெல்லாம் - கண்ணேஅது
        செந்தூக்காத் தூக்கிடுமாம்.                     

40

வெயிலடிக்கும் நேரமெல்லாம் - கண்ணேதண்ணி
        வெள்ளிபோலே மின்னுமடி.

    குடிதண்ணியும் குளிதண்ணியும் - கண்மணியே
        குடம்குடமா எடுப்பாங்களாம்.

    தண்ணிக்கொரு தீட்டுமில்லை - கண்ணேஅதைத்
        தடுக்கஒரு நாதியில்லை.

    பாப்பானுக்கும் பச்சைத்தண்ணி - கண்மணியே
        பறையனுக்கும் பச்சைத்தண்ணி.

    காசித்தீர்த்தம் ஆடப்போனால் - கண்ணேஅங்கே
        காண்கிறதும் பச்சைத்தண்ணி.                      

45

பட்டிக்காட்டில் பலசாதியாம் - கண்மணியே
        பறையன்முதல் பாப்பான்வரை.

    தோட்டிமுதல் தொண்டைமான்வரை - கண்மணியே
        தொழுந்தண்ணி பச்சைத்தண்ணி.

    சண்டையிழுக் குந்தண்ணியும் - கண்மணியே
        சாதிக்குள்ளே பச்சைத்தண்ணி.

    தெய்வம்போலே இருக்குந்தண்ணி - கண்மணியே
        திருடனுக்கும் பச்சைத்தண்ணி.

    ஏழைபாழை எல்லாருக்கும் - கண்மணியே
        இருக்கிறது பச்சைத்தண்ணி.                  

50

எண்பதடிக் கிணற்றிலேயும் - கண்மணியே
        இறைக்கிறது பச்சைத்தண்ணி.