|
ம
மலைமேலேயும் பச்சைத்தண்ணி
- கண்மணியே
குழிக்குள்ளேயும் பச்சைத்தண்ணி.
உயிர்கொடுப்பதும் பச்சைத்தண்ணி
- கண்மணியே
உயிர்எடுப்பதும் பச்சைத்தண்ணி.
ஊருக்குள்ளே ஆறுபோகக் -
கண்ணே அங்கே
ஊராரெல்லாம் குளிக்கப்போகத்
தென்கரையும் வடகரையும் -
கண்மணியே
திரண்டோடுதாம் பெரியவெள்ளம்.
55
கரைமேலே படிப்படியாய்க்
- கண்மணியே
கல்கட்டடம் கட்டியிருக்கும்.
வடகோடி மூலையிலே - கண்மணியே
வடபத்ரகாளி
கோயில்ஒண்ணு.
ஆண்களும் பெண்களும் - கண்மணியே
அயலூரு ஆளுகளும்
பத்ரகாளி கோயிலுக்குக்
- கண்மணியே
பயபக்தியாய்ப்
போவார்களாம்.
தெற்கத்திக்காற் றடிக்கையிலே
- கண்மணியே
திரும்பிவீடு போவார்களாம்.
60
தென்கோடி மூலையிலே - கண்மணியே
திருவாழத்தான்
வீடிருக்கு.
ராசாமகள் குளிப்பதற்குக்
- கண்மணியே
நாலுமூலைக் கட்டிடமாம்.
பத்துமுழத்துக் கொருவரிசை
- கண்மணியே
படிகளெல்லாம்
பளிங்குக்கல்லாம்.
பாதம்ரெண்டும் வலிக்காமே
- கண்மணியே
தாதிப்பெண்கள் தாங்கிவர
வெயிலடித்து வேர்க்காமே
- கண்ணேஅவள்
வெண்சாமரை வீசிவர.
65
|