பக்கம் எண் :

அரண

242

மலையருவி

அரண்மனைக்கும் ஆற்றோரத்துக்கும் - கண்மணியே
        அங்கங்கே செந்தலையன்நிற்க

    ஆளுக்கொரு வெடிபிடித்துக் - கண்மணியே
        அவன்எல்லோரும் நிற்கையிலே

    ஆளுக்கொரு தடிபிடித்துக் - கண்ணேஅவர்
        ஆஜராத்தான் நிற்கையிலே

    அந்தப்பாதை ஊராளுகள் - கண்மணியே
        அவசரமாய்ப் போகையிலே

    அவசரமாப் போறஆளைக் - கண்ணேஅவர்
        அளவுமீறி அமல்செய்கையிலே.                  

70

 வாறாளாம் ராசாமகள் - கண்மணியே
        வர்ணமயில் நடைநடந்து.

    ராசாமகள் வாறபாதை - கண்மணியே
        பாசம்வழுக் கிறாற்போலே.

    பாதமெல்லாம் வழுக்குமம்மா - கண்மணியே
        பளபளென்னு சொல்லுக்குமம்மா.

    ஒருகரையிலே தென்னந்தோப்பு - கண்மணியே
        மறுகரையில் மாந்தோப்பு.

    தென்னந்தோப்புக் குள்ளேஒரு - கண்மணியே
        சின்னக்குடிசு இருக்குதம்மா.                

75

கிடுகுபோட்டு மேய்ஞ்சகுடிசு - கண்மணியே
        கிடுகிடெண்ணு ஆடுங்குடிசு.

    கிடுகிடெண்ணு ஆடினாலும் - கண்ணேஅதுக்குக்
        கெட்டிக்கூரை போட்டதாலே

    மழைபெய்தாலும் ஒழுகாதம்மா - கண்ணேஅது
        இடிவந்தாலும் இடியாதம்மா.

    இளைத்துப்போன நேரத்திலே - கண்ணேஒரு  
        இளநீர்வெட்டிக் கொடுக்கலாமே.

_______________________________________________________

    66. செந்தலையன் - போலீஸ்காரன்